மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக பிரமுகர் கொலை-5 பேர் கைது - Agnipuratchi

மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக பிரமுகர் கொலை-5 பேர் கைது

Share This

கும்பகோணம் பகுதி திருபுவனத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர் ராமலிங்கம் என்பவர் சில தினங்களுக்க்கு முன்பு, பாக்கியநாதன் தோப்பு என்ற பகுதிக்கு சென்ற அவர், மதமாற்றம் செய்யும் குழு ஒன்றுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் பிப்ரவரி 5ம் தேதி இரவு, அவர் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கையில், வழிமறித்த மர்மநபர்கள் சிலர் ராமலிங்கத்தின் இரண்டு கைகளையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். அதிகமாக ரத்தம் வெளியேறியதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் மரணம் அடைந்து விட்டார். இந்நிலையில், கொலையாளிகளை கைது⛓ செய்யாவிட்டால் இறுதி காரியங்கள் செய்யமாட்டோம் என்று கூறி அவரின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். 
இந்தநிலையில் ராமலிங்கம் மகன் ஷாம்சுந்தர் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் 5 நபர்களிடம் தொடர் விசாரணை நடத்திய பிறகு இன்று திருவிடைமருதுார் பகுதியைச் சேர்ந்த அஸாருதீன்,குறிச்சி மலையைச் சேர்ந்த முகம்மது ரியாஸ்,திருபுவனம் பகுதியைச் சேர்ந்த சர்புத்தீன்,முகம்மது ரிஸ்வான், நிஜாம் அலி ஆகியோரை கைது⛓ செய்து, ஜேஎம் 1 நீதிமன்றத்தில் நீதிபதி கோதண்டராஜீ முன் அவர்கள் ஆஜர்படுத்தினர். அவர் வரும் 22ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages