மக்களவை தேர்தலில் தனது மகன் போட்டியிடுவது குறித்து ஓபிஎஸ் - Agnipuratchi

மக்களவை தேர்தலில் தனது மகன் போட்டியிடுவது குறித்து ஓபிஎஸ்

Share This

அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர் என்ற வகையில் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் தமது மகன் போட்டியிட உரிமை உள்ளது என்றும், தகுதியும் திறமையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரன் குடும்பத்தினர் தான் அரசியலுக்கு வரக்கூடாது. மற்றபடி வேறு யாரும் திறமை, தகுதி இருநதால் அரசியலுக்கு வரலாம் என்று கூறினார். இதனையடுத்து, கடந்த தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் இந்த முறை கூட்டணி இறுதியான பிறகே அ.தி.மு.க எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages