இம்மாத இறுதிக்குள் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா - Agnipuratchi

இம்மாத இறுதிக்குள் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா

Share This

கோவை வையம்பாளையத்தில் உழவர் பெரும்தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு ஒன்றரை கோடி ரூபாயில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார். இதையடுத்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில், நாட்டு மாட்டுக் கன்று ஒன்றினை முதல்வருக்கு பரிசாக அளித்துள்ளார். இந்நிகழ்வில் பேசிய முதல்வர், "வேளாண்துறையில் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக அரசு தான் அதிக நிதி பெற்றுத் தந்துள்ளது. கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தின் மூலம், ஆற்று நீர் கடலில் வீணாக கலப்பது நிறுத்தப்பட்டு நிரந்தர தீர்வு காணப்படும். மேலும், அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு இம்மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து, தமிழ்நாடு ரேக்ளா கிளப் அமைப்பினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, ரேக்ளா வண்டி ஒன்றை பரிசளித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages