மாநகராட்சியாகிறது ஓசூர், நாகர்கோவில்-சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் - Agnipuratchi

மாநகராட்சியாகிறது ஓசூர், நாகர்கோவில்-சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

Share This

ஓசூர், நாகர்கோவில் நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் சட்டமுன் வடிவு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சட்டப்பேரவையில் இது குறித்த சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார். இரண்டு பகுதி மக்களும் பல ஆண்டுகளாக விடுத்து வந்த கோரிக்கையை ஏற்று, இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். இந்த சட்ட மசோதா நாளை நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி இந்த இரு பகுதிகளில், பரப்பரப்பளவு விரிவடையும். வேலைவாய்ப்புகள், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை தேவையான வசதிகள் உயரும் மற்றும் நிர்வாக ரீதியிலான மேலாண்மை ஆகியவை உருவாக்கப்படும் என்பதோடு, தமிழகத்தில் ஏற்கனவே 12 மாநகராட்சிகள் உள்ள நிலையில், ஓசூர், நாகர்கோவிலுக்கான சட்டமசோதா நிறைவேற்றப்பட்டால், மாநிலத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 14 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages