தண்ணீரை விட தன்மானம் முக்கியம் - நடிகை ஸ்ரீப்ரியா - Agnipuratchi

தண்ணீரை விட தன்மானம் முக்கியம் - நடிகை ஸ்ரீப்ரியா

Share This

ரஜினியும் கமலும் நண்பர்கள் என்று கூறிக்கொண்டாலும் கடந்த சில மாதங்களாக ரஜினி மீது கமல் நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார். அந்த வகையில் சமீபத்தில் கோதாவில் இறங்கிய பின் பின்வாங்கினால் மரியாதை இருக்காது என்றும், பின்னர் எதற்காக தொடைதட்டி இறங்க வேண்டும் என்றும் சாப்பாடு பரிமாறிய பின்னர் சாப்பிட முடியாது என்று கூறுவது நல்லதா❓ என்றும் ரஜினியின் அறிக்கை ஒன்று குறித்து மறைமுகமாக கமல் தாக்கினார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி நடிகை ஸ்ரீப்ரியா சமீபத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது "தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று ஒருவர் கூறுகிறார். தமிழ் நாட்டில் தண்ணீரை விட தன்மானம் தான் மிக முக்கியம். தன்மானத்துடன் இருக்கும் தலைவருக்கு வாக்களியுங்கள், உண்மையை பேசுபவர்களுக்கு வாக்களியுங்கள், ஊழலை ஒழிப்பேன் என்று பேசுபவர்களுக்கு வாக்களியுங்கள் என்று அவர் கூறியிருந்தால் கூட ஏற்று கொண்டிருக்கலாம்" என்று ரஜினியை ஸ்ரீப்ரியா மறைமுகமாக தாக்கினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages