அனுமதியின்றி பிளக்ஸ் வைத்தால் சிறை - Agnipuratchi

அனுமதியின்றி பிளக்ஸ் வைத்தால் சிறை

Share This

முன் அனுமதியின்றி சட்டவிரோதமாக பிளக்ஸ் போர்டுகள் வைப்பது குறித்து, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பிளக்ஸ் போர்டு வைப்பதற்கு 2 நாட்கள் முன்னதாக அனுமதி பெற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்த அளவுள்ள சாலைகளில் எந்த அளவுள்ள பேனர்கள் வைக்கவேண்டும் என்று நிர்ணயித்து கூற வேண்டுமென்று கூறியுள்ள அவர், "முன் அனுமதியின்றி பிளக்ஸ் போர்டு வைப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அவ்வாறு வைப்பவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையோ அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும் என்று எச்சரிக்கை⚠ விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages