காஞ்சிபுரம் மாவட்டம், செட்டிப்பேடு பகுதியில், இன்று அதிகாலை 6 மணி அளவில் சவிதா பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் 🔥தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 1,700 மாணவர்கள் தங்கியுள்ள, எட்டு மாடிகள் கொண்ட கட்டிடத்தில் 228 அறைகள் உள்ளன. இதில் நான்காவது மாடியில் ஏசி மின்கசிவு காரணமாக 🔥தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தீப்பற்றியவுடன், மாணவர்கள் அலறி அடித்துக்கொண்டு விடுதி அறைகளில் இருந்து வெளியேறினர். தகவலறிந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் வந்து, தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் நான்காவது மாடியில் 9 அறைகள் எரிந்து சேதமடைந்தன. புகை மூட்டம் காரணமாக 10 மாணவர்கள் சிறு பாதிப்பு ஏற்பட்டு சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, சவிதா பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சவிதா பொறியியல் கல்லூரியின் மாணவர் விடுதியில் தீ🔥
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment