கோவையைச் சேர்ந்த சின்னத்தம்பி யானை, விளை நிலங்களை சேதப்படுத்துவதாகக் கூறி, கடந்த மாதம் 25-ம் தேதி, டாப்ஸ்லிப் அருகே உள்ள வரகளியாறு பகுதிக்கு வனத் துறையினர் இடமாற்றம் செய்தனர். ஆனால், அந்தச் சூழல் பழக்கமில்லாத சின்னத்தம்பி, 31ம் தேதியே தனது வாழ்விடத்தைத் தேடி மீண்டும் வெளியில் வந்தது. தொடர்ந்து பல்வேறு கிராமங்கள் வழியே சென்றதால், சின்னத்தம்பியைப் பிடித்து வனத்துறை கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, நேற்று அதிகாலை முதல் உடுமலைப்பேட்டை, கண்ணாடிப்புத்தூர் பகுதியில் இருந்த சின்னத்தம்பி யானையைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினர் இறங்கினர். அதிகாலை 3 மணியளவில் இருந்து அதனை கண்காணித்து நேற்று 9.30 மணியளவில் மயக்க ஊசியினை செலுத்தியுள்ளனர்.
இம்முறை சின்னத்தம்பிக்கு எந்த துன்புறுத்தலும் இல்லாமல் பிடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், வனத் துறை மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டு சின்னத்தம்பியைப் பிடித்தது. ஜே.சி.பி-க்கு பதிலாக, கேரளாவில் இருந்து ஹைட்ராலிக் லாரி வரவழைக்கப்பட்டிருந்தது. கும்கிகள் கலீம், சுயம்பு உதவியுடன் அந்த லாரியில் மதியம் 2 மணியளவில் சின்னத்தம்பி ஏற்றப்பட்டது. 3.30 மணியளவில் புறப்பட்ட வாகனம், நள்ளிரவு 12.30 மணியளவில் டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதிக்கு வந்தடைந்தது. நள்ளிரவு 2.40 மணியளவில், சின்னத்தம்பி யானையை கரால் எனப்படும் கூண்டில் அடைத்தனர். அங்கு, 24 மணி நேரமும் சின்னத்தம்பியை கண்காணித்து சிறப்புப் பயிற்சி வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்தம்பி யானை பிடிபட்டது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment