சென்னை கோயம்பேட்டில் இருந்து தேனிக்கு 35 பயணிகளுடன் புறப்பட்ட ஜாய் என்ற சொகுசுப் பேருந்து இரும்புலியூர் அருகே வந்தபோது, பேருந்தின் குளிர்சாதனப் பெட்டி அமைந்துள்ள பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதனைக் கண்ட ஓட்டுநர் உடனடியாக பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறு கூறியுள்ளார். இதற்குள் தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தத. தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அருகே பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானது. இதனால் பயணிகள் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்தது. ஓட்டுனரின் துரிதமான செயலால் உயிரிழப்பு எதுவும் நேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெருங்களத்தூர் அருகே திடீரெனெ தீ பிடித்து எரிந்த ஆம்னி பேருந்து
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment