பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து 🇮🇳இந்தியா கடும் கண்டனம் - Agnipuratchi

பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து 🇮🇳இந்தியா கடும் கண்டனம்

Share This

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபுரா பகுதி அருகே பயங்கரவாதிகள் தாக்கியதில் 👮44 வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், பலர் படுகாயம் அடைந்துள்ளார்கள். இந்த தற்கொலை படை தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. ஏற்கனவே, இந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் மும்பை உள்ளிட்ட பல இடங்களில் கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி இருக்கிறார்கள். இந்நிலையில் டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சொஹைல் முகமதுவிற்கு வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே சம்மன் அனுப்பினார். இதையடுத்து வெளியுறவுத் துறை அமைச்சர் அலுவலகத்தில் ஆஜரான சொஹைல் முகமதுவிடம் தாக்குதல் சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை 🇮🇳இந்தியா தெரிவித்தது. மேலும் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜெய்​ஸே இ முகமது அமைப்பு மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க 🇮🇳இந்தியா உத்தரவிட்டது. இது தவிர பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளின் செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தவும் ஆணையிட்டது. இதற்கிடையில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages