திருப்போரூரில் 13 வயது 👧சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு-குற்றவாளிக்கு தூக்கு - Agnipuratchi

திருப்போரூரில் 13 வயது 👧சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு-குற்றவாளிக்கு தூக்கு

Share This

கடந்த 2017ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த 👧சிறுமி ஒருவர் 9ம் வகுப்புப் படித்து வந்தார். அச்சமயம் சிறுமியின் தாயார் வேலைக்குச் சென்றிருந்தபோது, அவரது அண்டை வீட்டுக்காரரான 24 வயதுடைய அசோக் என்பவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, சிறுமியின் உடலை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. இதனையடுத்து, காவல்துறை நடத்திய விசாரணையில், சிறுமி👧 பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கிய போலீசார் அக்கம்பக்கத்து வீட்டார் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த அசோக் என்ற நபரை கைது⛓ செய்தனர். பின்னர் குண்டர் சட்டத்தில் அசோக் குமார் சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்த வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி புழல் ⛓சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசோக்குமார் என்ற வாலிபரை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages