நாளை அனைத்து கட்சி கூட்டம்-தலைமை தேர்தல் அதிகாரி - Agnipuratchi

நாளை அனைத்து கட்சி கூட்டம்-தலைமை தேர்தல் அதிகாரி

Share This

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க நாளை சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் நாளை நண்பகல் 12 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. எனினும், மக்களவை தேர்தலுக்கான தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில்,மக்களவை தேர்தல் தொடர்பாக கருத்து கேட்க நாளை அனைத்து கட்சிபிரதிநிதிகளுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages