தமிழ் பெயர் பலகை குறித்த அரசாணையை அமல்படுத்த கோரிய வழக்கு - Agnipuratchi

தமிழ் பெயர் பலகை குறித்த அரசாணையை அமல்படுத்த கோரிய வழக்கு

Share This

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து விதமான அலுவலகங்கள், கடைகளில் தமிழக அரசின் அரசாணை படி தூய தமிழில் பெரிய அளவிலும், அதற்கு கீழே சிறிய அளவில் பிற மொழியில் எழுதப்பட்ட பெயர் பலகைகள் தான் கடைகளுக்கு முன் வைத்திருக்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழக அரசின் அரசாணையை சுட்டிக்காட்டி, இந்த அரசாணையை முறையாக அமல்படுத்தாததால், கடைகளில், ஸ்டோர்ஸ், பேக்கரி, மெடிக்கல் ஷாப், என ஆங்கில வார்த்தைகளை பெரிதாக தமிழில் எழுதி உள்ளனர் என்றும், இவைகளை மாற்றி அங்காடி, அடுமணை, மருந்து கடை, என தமிழில் எழுத உத்தரவிட வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. இதனையடுத்து, இந்த மனு தொடர்பான தமிழக அரசாணையை அமல் படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறை செயலாளர், மார்ச் 8ம் தேதி பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages