அரசு முறை பயணமாக இந்தியா வந்த சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி வரவேற்றார். இளவரசர் முகமது பின் சல்மானுக்கு விமான நிலையத்தில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடியுடன் சவுதி இளவரசர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா-சவுதி அரேபியா இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியா-சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு, சுற்றுலா, முதலீடு உள்ளிட்டவை தொடர்பான 5 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. இது குறித்து மோடி, இந்தியாவின் மதிப்புமிக்க முக்கிய கூட்டாளி சவுதி அரேபியா என்றும் இந்தியாவின் உட்கட்டமைப்பு பணிகளுக்கு சவுதி அரேபியா முதலீடு செய்வதை வரவேற்கிறேன் என்றும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய இளவரசர் முகமது பின் சல்மான், கடந்த 70 ஆண்டுகளில் சவுதி அரேபியாவின் கட்டமைப்பில் இந்தியர்கள் பெரும் பங்கெடுத்துள்ளதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-சவுதி அரேபியா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment