சிவகாசியில் டிஆர்ஓ உரிமம் பெற்ற 150க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் நேற்று முன்தினம் முதல் இயங்கத் தொடங்கிய நிலையில், பட்டாசு விவகாரம் குறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பட்டாசு தொழில் முடக்கத்தால் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருவதாக தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதற்கு பின்னர் பேசிய நீதிபதிகள் பசுமை பட்டாசு தயாரிப்பதை ஒப்புக்கொண்டதாக முதலில் கூறினீர்கள். பிறகு அது சிரமமானதாக இருக்கிறது என கூறுகிறீகள். எத்தனையோ புதிய தொழில்நுட்பம் வந்து விட்டது. பசுமை பட்டாசை எளிமையாக தயாரிக்க வழி காண வேண்டியது தானே. பட்டாசு வெடிக்க வேண்டும் அதே சமயம், அது சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத வண்ணமும் இருக்க வேண்டும். டெல்லியை விட காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்கள் நாட்டில் உள்ளது என்று கருத்து தெரிவித்தனர். இதன் பின்னர், பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், பசுமைபட்டாசு, மாசுக்குறைந்த பட்டாசு தயாரிப்பது குறித்து பிப்.26ம் தேதிக்குள் பதில் தர வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு🎉 விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment