நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாயின் முழுஉருவப் படம் - Agnipuratchi

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாயின் முழுஉருவப் படம்

Share This

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழுஉருவப் படத்தினை, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, நீண்ட அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரரான வாஜ்பாய், பெரும்பாலான காலத்தை எதிர்க்கட்சி வரிசையில் செலவிட்டவர். எந்த நிலையிலும் கொள்கைகளில் இருந்து ஒருபோதும் மாறாத வாஜ்பாய், பொதுநலனுக்காக அயராது பாடுபட்டவர் என்று புகழாரம் சூட்டினார். மேலும், "எதிர்க்கட்சிகளை விமர்சித்தவர் என்றாலும், இதயத்தில் எதிர்க்கட்சிகள் மீது எவ்வித வெறுப்பும் இல்லாதவர் என்பதற்காகவே வாஜ்பாய் நினைவுகூரப்படுவார் என்று வாஜ்பாய் குறித்து காங்கிரஸ் சார்பில் பேசிய குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். 
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages