டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது அவர் பேசுகையில், ரபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி அனில் அம்பானிக்கு இடைத்தரகர் போல் செயல்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சக நடவடிக்கைகளை பிரதமர் அலுவலகம் உளவு பார்த்துள்ளது. ரபேல் விவகாரம் தொடர்பாக அனில் அம்பானி பிரெஞ்ச் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து பேசியுள்ளார். பிரான்ஸ் அரசுக்கும் அனிலுக்கும் இடையே பிரதமர் மோடி தரகராக செயல்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ராணுவ ரகசியத்தை காக்க வேண்டிய பிரதமர் அதனை தனிநபரிடம் கூறியுள்ளார். ரபேல் விவகாரம் தொடர்பான சி.ஏ.ஜி. அறிக்கை பயனற்றது. மோடியின் ஆடிட்டர் ஜெனரல் சவுக்கிதார் தான் சி.ஏ.ஜி. அறிக்கையை தயாரித்துள்ளார் என்று கூறிய அவர், தமது குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ரபேல் விவகாரம்-பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டும் ராகுல் காந்தி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment