நாட்டின் பாதுகாப்புக்கான சிறப்பு அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அருண் ஜெட்லி பேட்டியில் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தீவிரவாத தாக்குதலை தடுக்க அனைத்து நடவடிக்கையை வெளியுறவு அமைச்சகம் எடுக்கும். தாக்குதலை நடத்தியவர்களுக்கு உரிய பதிலடி தரப்படும். உலக அரங்கில் பாகிஸ்தானை தனித்துவிட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுவதோடு, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதனை தொடர்ந்து, வர்த்தக ரீதியிலான சலுகைகள் இனிமேல் பாகிஸ்தானுக்கு வழங்கப்படாது என்றும் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மிகப்பெரிய விலையை கொடுப்பார்கள் எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக ரீதியாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து-அருண் ஜெட்லீ
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment