திருச்சி- காரைக்கால் மின்மய பணி மார்ச்சில் முடியும்-குல்ஸ்ரஷ்தா - Agnipuratchi

திருச்சி- காரைக்கால் மின்மய பணி மார்ச்சில் முடியும்-குல்ஸ்ரஷ்தா

Share This

திருவாரூருக்கு நேற்று வருகை தந்த தென்னக ரயில்வே பொது மேலாளர் குல்ஸ்ரஷ்தா, காரைக்காலில் இருந்து அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 59 வேகன்களில் நிலக்கரி ஏற்றியவாறு மேட்டூர் புறப்பட்ட 150 வது சரக்கு ரயிலை, கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பேட்டியளித்த அவர் திருச்சி- காரைக்கால் மற்றும் விழுப்புரம்- கடலூர் ரயில் வழித்தடம் மின்மயமாக்குதல், திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப்பணிகள் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். திருவாரூரில் இருந்து திருச்சிக்கு புதிய ரயில்கள் இயக்குவது தொடர்பாக பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வருவாய் குறித்து ஆலோசித்த பின்னரே முடிவு செய்யப்படும். கூடுதல் ரயில் சேவை மற்றும் ரயில்கள் தூரம் நீட்டிக்கப்படுவது எம்பிக்கள் வைக்கும் கோரிக்கைகளை பொறுத்தே அமைய உள்ளது. இதில் முடிவெடுக்கும் அதிகாரம் ரயில்வே துறை அமைச்சகத்தின் கையில் தான் உள்ளது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages