குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை - Agnipuratchi

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை

Share This

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பகல் 1.45க்கு தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர், மாலை 4 மணிக்கு தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் நடக்கும் விழாவில் பங்கேற்று, அங்கு மகாத்மா காந்தியின் சிலையைத் திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து, ஆந்திரப்பிரதேசம் மாநிலம் நெல்லூருக்கு நாளை செல்லும் ராம்நாத் கோவிந்த் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என ராஷ்ட்ரபதி பவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் அங்கு ஸ்வர்ண பாரதி அறக்கட்டளையின் 18வது ஆண்டு விழாவில்கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages