பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிட்ட விவகாரம் - உயர் நீதிமன்றத்தில் வழக்கு - Agnipuratchi

பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிட்ட விவகாரம் - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Share This

தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டத்தில், தேசத்தை துண்டாக்கும் வகையில் பிரதமர் மற்றும் ஆளுநருக்கு கருப்பு பலூன் காட்டி எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியது. இதனால் தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் திட்டங்கள் வந்து சேருவதில் தாமதம் ஏற்படுவதாக, மதுரையை சேர்ந்த முகமது என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் திமுக, மதிமுக, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், தமிழ் புலிகள், மே 17 இயக்கம் உட்பட அனைத்து கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறி இருக்கிறார். இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கருப்பு பலூன்களை பறக்க விடுதல் மற்றும் பிரதமர் வருகைக்கு எதிராக வசனங்களை பரப்புதல் போன்ற செயல்களில் ஈடுபட்ட அரசியல் கட்சிகளை தடை செய்யக்கோரிய வழக்கில், தொடர்புடைய அரசியல் கட்சிகளை எதிர்மனுதாரராக சேர்க்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து இவர் தேர்தல் ஆணையத்திற்கும் மனு அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages