ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். அவ்வகையில் நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வீரர்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலில் பலியான 40 வீரர்களில் 23 வீரர்கள் எஸ்.பி.ஐ. வங்கியில் கடன் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு காப்பீட்டுத் தொகையாக வீரர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.30 லட்சம் வழங்க இருப்பதாகவும் கூறி உள்ளது. மேலும், எஸ்பிஐ வாயிலாக சிஆர்பிஎப் வீரர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர், bharatkeveer.gov.in என்ற இணையதளத்தில் நிதியை நேரடியாக வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Home
அண்மை செய்திகள்
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் வங்கி கடன்கள் தள்ளுபடி-எஸ்.பி.ஐ. வங்கி
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் வங்கி கடன்கள் தள்ளுபடி-எஸ்.பி.ஐ. வங்கி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment