சென்னை தேனாம்பேட்டை-வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் - Agnipuratchi

சென்னை தேனாம்பேட்டை-வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில்

Share This

சென்னை வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நிறைவுற்று, சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இந்த வழித்தடத்தில், இன்று முதல், மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது. 10 கிலோ மீட்டர் தூரத்திற்கான இந்த சேவையை, பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் திருப்பூரில் இருந்து, இன்று பிற்பகல், 3.15 மணியளவில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கின்றனர். இதோடு அந்த வழித்தடத்தில் ஆயிரம்விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், ஐகோர்ட்டு, மண்ணடி மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களையும் இருவரும் இணைந்து திறந்து வைக்க உள்ளனர். சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடக்கவிழா நடைபெறுகிறது. டிஎம்எஸ் முதல் விமான நிலையம் வரை இருந்த சேவை, தற்போது வண்ணாரப்பேட்டையிலிருந்து டிஎம்எஸ் வரையில் விரிவாக்கம் செய்யப்பட்டு, பணிகளும் நிறைவுபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages