குண்டூரில் பிரதமர் மோடி-ஆந்திர முதல்வர் குறித்து பேச்சு - Agnipuratchi

குண்டூரில் பிரதமர் மோடி-ஆந்திர முதல்வர் குறித்து பேச்சு

Share This

ஆந்திர மாநிலம் குண்டூரில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பாக கடலோர முனையம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை குண்டூர் வந்தடைந்தார். அடிக்கல் நாட்டிய அவர் பேசுகையில், "மத்திய அரசின் திட்டங்களையே முதல்வர் சந்திரபாபு காப்பியடிக்கிறார். அரசியலில் அணி மாறுவதில் முன்னோடியாக சந்திரபாபு திகழ்கிறார்" என்று பேசியுள்ளார். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சந்திரபாபு தவறு இழைத்துவிட்டார். பொது மக்களின் வரி பணத்தை தனது அரசியல் கூட்டத்திற்கு அவர் பயன்படுத்தி வருகிறார். ஆனால், இந்த நிகழ்ச்சி பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் ஆந்திர மக்கள் ஆசிர்வதித்து மீண்டும் என்னை ஆட்சியில் அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages