நாகை மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு - Agnipuratchi

நாகை மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

Share This

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை டாட்டா நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்ற மீனவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். அவருடன் அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த கந்தசாமி, கோபாலகிருஷ்ணன், ஆனந்த்பாபு, நிலவரசன், வீரசெல்வன், பிரித்திவிராஜன் ஆகியோரும் கடந்த 7ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 20 நாட்டிங்கல் கடல் மைல் தொலைவில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சிறிய கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். பின்னர் ஏறி எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 7 பேரையும் சிறைபிடித்தனர். பின்னர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் திருகோணமலைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில், இதனை தொடர்ந்து நாகை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட தகவல் அறிந்த மீனவ கிராம மக்கள் இதனால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages