தேசிய பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, 'பெண்குழந்தைகளை காப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு சிறந்த மாநிலத்துகான விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் மேம்பட்ட சமூகப் பங்கேற்பு என்ற பிரிவில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. விருதுகளை அதிகாரிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்தனர். மேலும், சிறந்த பெண்குழந்தைக்கான மாநில விருதை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரக் ஷனாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ரக்க்ஷனாவுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது. இதற்கிடையே, சிறுமியான தனக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தியதற்காக கடந்த ஆண்டு மாநில அரசு விருது பெற்ற நந்தினி இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளூர் சாதனையாளராக அறிவிக்கப்பட்டதற்காக முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிட வேண்டியவை.
தேசிய பெண் குழந்தைகள் தினம்-கரூரை சேர்ந்த ரக்க்ஷனாவுக்கு மாநில விருது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment