வேளாண்மை தொடர்பான மானியம், பயிர்க்காப்பீடு, உள்ளிட்ட 12 சேவைகளைக் கொண்ட உழவன் என்ற கைபேசி செயலி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. இந்த செயலியில் டிராக்டர் அன்டு பார்ம் எக்யூப்மெண்ட்ஸ் லிமிடெட், ஜெபார்ம் என்ற நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் பணிகளுக்கான எந்திரங்களை விவசாயிகள் வாடகைக்கு பயன்படுத்த பதிவு செய்வதற்கான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாய எந்திரங்களை வாடகைக்கு விடுவோரும், பயன்படுத்த விரும்புவோரும் தொடர்பு கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலியை பயன்படுத்த முடியாதவர்கள் 1800 420 0100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே சிப்காட் சார்பில் திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் கிராமத்தில் 8 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணி புரியும் பெண்களுக்கான தங்கும் விடுதியை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
உழவன் 📱கைபேசி செயலியில் மேம்படுத்தப்பட்ட சேவை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment