பாலகிருஷ்ண ரெட்டியின் ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு - Agnipuratchi

பாலகிருஷ்ண ரெட்டியின் ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு

Share This

கடந்த 1998ம் ஆண்டு ஓசூர் அடுத்த ஜி.மங்கலம் சுற்று பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 72வது குற்றவாளியாக பாலகிருஷ்ணரெட்டியும் சேர்க்கப்பட்டுயிருந்தார். இதையடுத்து பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 3⃣ ஆண்டுகள் சிறை தண்டனையை சமீபத்தில் விதித்தது. இந்நிலையில் தற்போது ஓசூர் தொகுதி காலியாக இருப்பதாக தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் முறைப்படி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages