சிவகாசியில் மீண்டும் பாட்டாசு ஆலைகள் திறப்பு - Agnipuratchi

சிவகாசியில் மீண்டும் பாட்டாசு ஆலைகள் திறப்பு

Share This

சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி, பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம், பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக்கூடாது, உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இந்த நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நவம்பர் 13ம் தேதி முதல் 1,070 பட்டாசு ஆலைகளை மூடி, ஆலை உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம் தொடங்கினர். இதனால், சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்தனர். இதனையடுத்து, "பட்டாசு வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை காத்திருக்காமல், இடைக்கால தீர்ப்பின்படி பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்" என கலெக்டர் சிவஞானம் வலியுறுத்தினார். இதன்படி, உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், தொழிலாளர்களின் நலன் கருதி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 209 டிஆர்ஓ உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் 150க்கும் மேற்பட்ட ஆலைகள் நேற்று திறக்கப்பட்டன. இது குறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் குமார் கூறுகையில் தொழிலாளர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்படுவதால் பட்டாசு ஆலைகளை மீண்டும் திறந்துள்ளோம். பட்டாசு தொழில் பிரச்னையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை முதல் பெரும்பாலான ஆலைகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages