தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றார் நாராயணசாமி - Agnipuratchi

தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றார் நாராயணசாமி

Share This

புதுச்சேரியில் கடந்த 6 நாட்களாக புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து, புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையில் நேற்று மாலை 6.30 மணியளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது. அதில், இலவச அரிசி வழங்குதல், மின் ஊதியர்களுக்கு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். சுமார் நான்கு மணிநேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்தது. பிறகு சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் நாராயணசாமி தனியாக ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் எங்களுடைய கோரிக்கைகளுக்கு கிரண் பேடி சம்மதம் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த தர்ணா போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுகிறேன் என்று தெரிவித்தார். 
மேலும், சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடத்தப்பாட ஆலோசனையில், புதுச்சேரியில் ஆட்சி அதிகாரங்கள் தொடர்பாக நீதிமன்றத்திலிருந்து தீர்ப்பு வரும் வரை பொறுத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages