பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் ✍🏻கையெழுத்தானது. - Agnipuratchi

பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் ✍🏻கையெழுத்தானது.

Share This

தமிழகத்தில் பாமக - அதிமுக கூட்டணி குறித்து பல வாரங்களாக செய்திகள் வெளியான நிலையில், பாமக தரப்பில் மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் ராமதாஸ் மற்றும் அமைச்சர் தங்கமணி இடையே இன்று பேச்சுவார்த்தை நடந்தது. இதனையடுத்து சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது "இரு தரப்பு இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. தொகுதி பங்கீடு குறித்த முக்கிய விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன. பேச்சுவார்த்தையின் இறுதியில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது விரைவில் தெரியவரும்" என்று அவர்கள் கூறினார். மேலும் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயல் பிற்பகலில் விடுதிக்கு வரவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages