ரேஷன் கடை பணியாளர்கள் மீது நடவடிக்கை - Agnipuratchi

ரேஷன் கடை பணியாளர்கள் மீது நடவடிக்கை

Share This

போராட்டம் நடத்தி வரும் ரேசன் கடை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மாற்று ஏற்பாடு செய்துள்ளதால் விநியோகப் பணி பாதிக்காது என விளக்கமளித்துள்ளார். முறைப்படி 2020ம் ஆண்டே அடுத்த ஊதிய மாற்றத்துக்கு தகுதி பெறும் நிலையிலும் மனிதாபிமான அடிப்படையில் கோரிக்கைகளைப் பரிசீலித்து, குழுவின் பரிந்துரைப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறியுள்ளார். இது குறித்து அறிந்த பல சங்கத்தினர் பணியில் ஈடுபடும் நிலையில், ஏழை மக்களுக்கு அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொது விநியோகத்திட்டத்தின் பொது நலனைப் புறந்தள்ளி சிலர் சுயநலத்துடன் போராடி வருவதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages