கோவையில் 👥கைதிகள் நடத்தும் ⛽பெட்ரோல் பங்க் ❗ - Agnipuratchi

கோவையில் 👥கைதிகள் நடத்தும் ⛽பெட்ரோல் பங்க் ❗

Share This

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறைக் 👥கைதிகளால் நடத்தப்படும் ⛽பெட்ரோல் பங்குகள் இன்று திறக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக கோவையில் 'பீரிடம் பில்லிங் ஸ்டேசன்' என்ற பெயரில் ⛽பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டது. 🏛தமிழ்நாடு சிறைத்துறையும், இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் 🏢நிறுவனமும் இணைந்து இதனை நடத்துகின்றனர். இதன் முதல் விற்பனையை கோவை சரக சிறைத்துறை துணை தலைவர் அறிவுடைநம்பி துவக்கி வைத்தார். இது குறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி.அறிவுடை நம்பி கூறியதாவது "24 மணி நேரமும் செயல்படும் இந்த ⛽பெட்ரோல் பங்கில் 35 சிறை 👥கைதிகள் சுழற்சி அடிப்படையில் பணியில் ஈடுபடுத்த உள்ளதாகவும், இந்தியன் ஆயில் நிறுவனம் சிறை கைதிகளுக்கு ஊதியம் வழங்கும் எனவும் அறிவுடைநம்பி தெரிவித்தார். தமிழகத்தில் முதன்முறையாக தண்டனை கைதிகளை கொண்டு நடத்தப்படும் ⛽பெட்ரோல் பங்க் இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பணியாற்றும் கைதிகளுக்கு பெட்ரோல் பங்க் ஊழிர்களுக்கான சீருடைகளும் வழங்கப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages