பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை ஒத்திவைப்பு - Agnipuratchi

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை ஒத்திவைப்பு

Share This

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முக்கிய நகரங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி தமிழகம் வந்த மோடி, மதுரையில் நடைபெற்ற விழாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அதேபோல், கடந்த 10ம் தேதி திருப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றியதோடு, சென்னை டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இதன் அடுத்தக்கட்டமாக, பிரதமர் மோடி வரும் 19ம் தேதி கன்னியாகுமரி வருகை தர உள்ளதாகவும், சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அன்று அறிவிக்க உள்ளதாகவும் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 19ம் தேதிக்குப் பதில், மார்ச் 1ம் தேதியன்று கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages