கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு ஈஜிபுரா கிராமத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலில் 350 டன் எடை கொண்ட ஒரே கல்லில் செய்யப்பட்ட பிரமாண்ட பெருமாள் சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொரக்கோட்டை கிராமத்தில் செய்யப்பட்டது. இந்த சிலை சாலை வழியாக மிகப்பெரிய லாரியில் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், இந்த சிலையின் எடை அதிகம் என்பதால், சாலைகள் சேதம் அடைகின்றன. இதனால் சிலையினை கொண்டு செல்ல தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இது குறித்த விசாரணையில், சிலையை கொண்டு செல்ல அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா❓என்று 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிலை சாலை வழியாக கொண்டு செல்வதால் மனுதாரருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் பாதிக்கப்படாத நபர் என்பதால் அவர் தொடர்ந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் கூறி உத்தரவிட்டுள்ளார்கள்.
பிரம்மாண்ட பெருமாள் சிலையினை கொண்டு செல்வது குறித்த வழக்கு தள்ளுபடி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment