புல்வாமா தாக்குதல்-வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு நிர்மலா சீதாராமன் அஞ்சலி - Agnipuratchi

புல்வாமா தாக்குதல்-வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு நிர்மலா சீதாராமன் அஞ்சலி

Share This

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 44 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சுப்பிரமணியன், சிவசந்திரன் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களது உடல்கள் டெல்லியில் இருந்த தனி விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டுள்ளன. அவர்களது உடலுக்கு பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் இருவரின் உடல்களும் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. தமிழக வீரர்களுடன் கர்நாடகம், கேரளாவை சேர்ந்த வீரர்கள் உடல்களும் திருச்சி வந்துள்ளது. இவர்கள் மரண செய்தியை அறிந்த அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages