ஆந்திரா அருகே படகு மீது சரக்கு கப்பல் மோதல் - Agnipuratchi

ஆந்திரா அருகே படகு மீது சரக்கு கப்பல் மோதல்

Share This

சென்னை காசிமேட்டை சேர்ந்த சின்னதுரை என்பருக்கு சொந்தமான விசைப்படகில் 11 மீனவர்கள் 4 நாட்களுக்கு முன்பு ஆந்திரா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் நேற்று காலையில் ஆந்திர எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த சரக்கு கப்பல் ஒன்று விசைப்படகில் நேருக்கு நேர் மோதியது. இதில் விசைப்படகு கவிழ்ந்து சேதம் அடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த படகில் இருந்த 11 மீனவர்களும், கடலில் குதித்தனர். நடுக்கடலில் தத்தளித்த அவர்களை அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீட்கப்பட்டதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு நேற்று கரை திரும்பினர். இதனையடுத்து கடலில் மூழ்கிய படகினை மீட்டு தர வேண்டும், சேதம் அடைந்த படகிற்கு நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும் என்று போலீசில் விசைப்படகு உரிமையாளர் புகார் அளித்துள்ளார். விசைப்படகு மீது மோதிய சரக்கு கப்பல் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்று மீனவர்கள் கூறியுள்ள நிலையில் போலீசார் இது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages