விகடன் சர்வே: 21 வயதுக்கு உடபட்டோரின் திருமணத்துக்கு பெற்றோர் ஒப்புதல் தேவை! பாமகவின் கோரிக்கைக்கு தமிழக மக்கள் மாபெரும் ஆதரவு! - Agnipuratchi

விகடன் சர்வே: 21 வயதுக்கு உடபட்டோரின் திருமணத்துக்கு பெற்றோர் ஒப்புதல் தேவை! பாமகவின் கோரிக்கைக்கு தமிழக மக்கள் மாபெரும் ஆதரவு!

Share This

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் "21 வயதுக்கு உட்பட்டோர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனில், இரு தரப்பு பெற்றோரின் அனுமதியும் பெற வேண்டும்" என்கிற கோரிக்கை இடம்பெற்றிருப்பதற்கு எதிராக ஆனந்த விகடன் இதழ், தமிழ்நாட்டின் முற்போக்கு கும்பல் ஆகியன வெறுப்பு பிரச்சாரத்தினை முன்னெடுத்தன.

குறிப்பாக, 'கட்டற்றக் காதல் ஆதரவு கும்பலை சேர்ந்தவர்கள்' இதற்காக தீவிரமாக வேலை செய்தனர். கவிதா முரளீதரன் என்பவர் ஆங்கில ஊடகங்களில் எழுதினார். விகடன் குழுமம் தமிழில் பிரச்சாரம் செய்தது.

பள்ளிச்சிறுமிகள் படிப்பதை கைவிட்டுவிட்டு, பொறுக்கிகளை இழுத்துக்கொண்டு ஓட வேண்டும். அதுதான் முற்போக்கு, அதுதான் புரட்சி!' என்று இவர்கள் போதித்தார்கள்!

தங்களது நாடகக் காதல் பிரச்சாரத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் விகடன் குழுமம் ஒரு கருத்துக்கணிப்பையும் நடத்தியது. அதில் கேட்கப்பட்ட கேள்விகளும், மக்களின் வாக்குகளும் கீழே:

1. பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் 21 வயதுக்கு உட்பட்டவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் அனுமதி வேண்டும் என்பதை வரவேற்கிறீர்களா?


ஆம். வரவேற்கிறேன் = 66%

இல்லை. எதிர்க்கிறேன் = 29.7%

கருத்து இல்லை = 4.3%

2. பாமகவின் இந்த அறிவிப்பு திருமணம் செய்து கொள்ளும் உரிமையில் தலையிடுகிறதா?

இல்லை = 59.4%

ஆம் = 40.6%

3. பாமகவின் கொள்கை பெண்களின் விருப்பத்தை ஒடுக்குமா?

இல்லை. ஒடுக்காது = 64%

ஆம். ஒடுக்கும் = 36%

4. வளரிளம் பருவத்தினரின் பிரச்சினைகளுக்கு பாமகவின் யோசனை தீர்வாகுமா?

ஆம். தீர்வாகும் = 60.4%

இல்லை. தீர்வாகாது = 21.1%

புதிய பிரச்சினைகளை உருவாக்கலாம் = 18.4%

5. இது சாதிக்குள் திருமணம் என்பதற்கான யோசனையா?

இல்லை = 48.7%

ஆம் = 43.9%

கருத்து இல்லை = 7.5%

ஆக, மொத்தத்தில் தமிழ்நாட்டின் மக்களில் பெரும்பாலானவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் இளம் பெண்கள் பாதுகாப்பு கோரிக்கைகளை ஆதரிக்கிறார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

இளம் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும், சிறுமிகளின் திருமணம் தடுக்கப்பட வேண்டும். இளம் சிறார்களுக்கு கல்வி, பயிற்சி, பொருளாதார சுயசார்புக்கான திறன் வளர்ச்சி ஆகியனதான் முக்கியம். அவற்றையெல்லாம் அடையும் முன்பாக, காதல் சீரழிவில் அவர்கள் சிக்கிவிடக் கூடாது. வன்முறைக்கு ஆட்படக் கூடாது என்பது ஐநா பெண்கள் அமைப்பு (UN Women), ஐநா குழந்தைகள் அமைப்பு (UNICEF), ஐநா மனித உரிமைகள் பேரவை (UNHRC), உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆகியவற்றின் நோக்கமாக இருக்கிறது. அதனைத்தான் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

எனவே, தமிழ்நாட்டில் முற்போக்கு வேடதாரி நாடகக் காதல் உருவாக்கி வைத்திருக்கும் போலி சீரழிவுக் கோட்பாடுகள் இனியாவது உடைக்கப்பட வேண்டும். மனித உரிமைகள், ஜனநாயகம், சமூகநீதி, நீடித்திருக்கு மேம்பாடு ஆகிய கோட்பாடுகளுக்கு ஏற்ற அறிவியல் பூர்வமான, நவீனகால கருத்துகளை இனியாவது ஊடகங்கள் ஏற்க வேண்டும்!

(இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளை மறைக்காமல் வெளியிட்ட விகடன் குழுமத்துக்கு நன்றி)

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages