திமுக கூட்டணிக்கு ஐஜேகே ஆதரவு😳 - Agnipuratchi

திமுக கூட்டணிக்கு ஐஜேகே ஆதரவு😳

Share This

மக்களவை 🗳தேர்தலில் 🌞திமுக 🤝கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது😯. மேலும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி கட்சிக்கு ஒரு இடம் வழங்கப்பட்டது👍. கொங்கு நாடு மக்கள் கட்சி 🌞திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது🔈. இந்நிலையில் 🏢அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி தொடர்பாக 2ம் கட்ட பேச்சுவார்த்தை🗣 நடைபெற்று வருகிறது. இதனிடைய ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்🎙, "மக்களைவை 🗳தேர்தலில் ஐஜேகே கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிக்கும்🙂. தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் தேவை. அந்த அரசியல் மாற்றம் திமுக தலைவர் ஸ்டாலினால் தான் முடியும்😳" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்🎙 "தேர்தல் கூட்டணி பற்றி தற்போது எதுவும் பேசவில்லை🚫" என்றும் தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages