🏛நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் 📜அறிக்கையை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தேர்தல் 📜அறிக்கையை வெளியிட்டுள்ளனர். மேலும் திமுக 💺தலைமையிலான கூட்டணியில் மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதிமுக 🗳தேர்தல் 📜அறிக்கையை தற்போது வைகோ வெளியிட்டுள்ளார். அதன் சிறப்பம்சம் பின்வருமாறு👇🏻
🔰முல்லைப் பெரியாறில் புதிய 🌊அணைக்கட்டும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தப்படும்.
🔰கல்வியை மாநில 📜பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்துவோம்.
🔰இணையதள வணிகத்திற்கு 🚫தடை, நியூட்ரினோ திட்டத்திற்கு 🚫தடை விதிக்க வேண்டும், சீமை கருவேல 🌳மரங்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துவோம்.
🔰மரண தண்டனை கூடாது, மணல் கொள்ளைகள் தடுக்க படவேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment