சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கனகராஜ் மறைவுக்கு மருத்துவர் இராமதாசு இரங்கல் - Agnipuratchi

சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கனகராஜ் மறைவுக்கு மருத்துவர் இராமதாசு இரங்கல்

Share This

கோவை மாவட்டம் சூலூர்  தொகுதி  சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான கனகராஜ் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

2016&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சூலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனகராஜ், அத்தொகுதி மக்களிடம் நற்பெயர் பெற்றிருந்தார். மனதில் உள்ளதை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக பேசும் வழக்கம் கொண்டவர். இதற்கு முன் மாவட்ட ஊராட்சித் தலைவராக பதவி வகித்த போது பல்வேறு நலத்திட்டப் பணிகளை நிறைவேற்றி மக்களிடம் பாராட்டு பெற்றவர் கனகராஜ்.

கனகராஜின் மறைவு சூலூர் தொகுதி மக்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages