வருகின்ற 🗳மக்களவைத் தோ்தலில் வேலூா் தொகுதியில் 🌞திமுக பொருளாளா் துரைமுருகனின் மகன் 👨கதிா் ஆனந்த் போட்டியிடுகிறாா்🎉. இந்த நிலையில் 👴துரைமுருகன் 🏡வீட்டில் வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்யப்படுவதற்காக, 💸பணம், 🎁பரிசுப்பொருட்கள் இருப்பதாக தகவல் வெளியானது😳. இதனையடுத்து அவரது வீட்டில் 💸வருமான வரித்துறை 🤵அதிகாாிகள், 👮தோ்தல் பறக்கும் படை அதிகாாிகள் இரவு ⌚10 மணிக்கு மேல் திடீரென சோதனையிட👀 முயன்றனா். அப்போது துரைமுருகன், கதிா் ஆனந்த் உள்ளிட்டோா் வீட்டில் இல்லை🚫 என்று கூறப்படுகிறது🗣. மேலும் துரைமுருகனுக்கு, "நெஞ்சு வலி உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதால், இந்த நேரத்தில் சோதனை செய்ய வேண்டாம். நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு💪 வழங்கத் தயாராக இருக்கிறோம். நீங்கள் காலையில் சோதனையைத் தொடங்குங்கள்👍" என்று துரைமுருகன் தரப்பில் அதிகாாிகளுக்கு 📄கடிதம் வாயிலாக தொிவிக்கப்பட்டது🔈. எனினும் அதனை ஏற்க மறுத்த🙄 அதிகாரிகள், அங்கிருந்து செல்லாமல், சோதனையிடும் நோக்கில் துரைமுருகனின் வீட்டு வாயிலில் உள்ளனா். அவா்களுடன் அப்பகுதி 🌞திமுக 👥தொண்டா்கள் வாக்குவாதத்தில்🗣 ஈடுபட்டனா். இதனைத் தொடா்ந்து அப்பகுதியில் 👮காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்😯 என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர், நள்ளிரவு ⌚3 மணியளவில் துரைமுருகன் 🏡வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள் தொடர்ந்து ⌚5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை👀 செய்து வந்தனர். மேலும், சித்தூர் சாலையில் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிரானந்திற்கு சொந்தமான கிங்க்ஸ்டன் பொறியியல் 🏢கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதற்கிடையில் வேலூர் 🌞திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் 🏘வீட்டுகளிலும் சோதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இன்று ⌚காலை 8.30 மணியளவில் சோதனை நிறைவுப் பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன🔈. மேலும் சோதனையில் 📄ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை😟 என தகவல்கள் கூறுகின்றன🗣.
🌞திமுக பொருளாளர் துரைமுருகன் 🏡வீட்டில் 💸வருமான வரித்துறை சோதனை.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment