கடந்த 📆14ம் தேதி 🏛புல்வாமா தாக்குதலில் 👥40 சிஆர்பிஎப் 👮வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக கடந்த மாதம் 📆26ம் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாத ⛺முகாமின் நிலைகள் மீது இந்திய 🛩விமானப்படை தாக்குதல் நடத்தியது. அப்போது 👨அபிநந்தன் ஓட்டிய மிக்ரக விமானத்தை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதையடுத்து, விமானத்திலிருந்து பாதுகாப்பாக பாராசூட் மூலம் வெளியே பறந்த அபிநந்தனை, பாகிஸ்தான் ராணுவம் கைது⛓ செய்தது. அதன்பின் சர்வதேச அழுத்தம், இந்தியாவின் நெருக்கடிகள் ஆகியவற்றால், 📆3 நாட்களுக்கு பின் அபிநந்தனை கடந்த 📆1ம் தேதி வாகா எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் 👮அதிகாரிகள், 🇮🇳இந்திய அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, பாகிஸ்தான் உளவுத்துறையினர் 👨அபிநந்தனின் உடலில் உளவுபார்க்கும் கருவி ஏதேனும் பொருத்தி அனுப்பியிருக்கலாம்😨 என்ற 📰செய்திகள் வெளியாகின. இந்நிலையில், டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவருக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முடிவுகளின்படி 👨அபிநந்தனின் உடலில் உளவுபார்க்கும் கருவி ஏதும் பொருத்தப்படவில்லை🚫. ஆனால், அவரது முதுகுத்தண்டு எலும்பின் கீழ் பகுதியில் ஒரு காயம் ஏற்பட்டுள்ளதாகவும்😳, பாகிஸ்தான் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட 👨அபிநந்தனின் 🛩போர் விமானம் கீழே விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அவர் பாரசூட் மூலம் தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்ததில் இந்த காயம் ஏற்பட்டிருக்கலாம்😯 என்றும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்🔈.
அபிநந்தனின் உடலில் உளவுபார்க்கும் கருவி ஏதும் பொருத்தப்படவில்லை🚫 என தகவல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment