சித்ரா பவுர்ணமி 📆தினம்-🏛திருவண்ணாமலைக்கு 🚌2895 சிறப்பு பஸ்கள் இயக்கம்🎉 - Agnipuratchi

சித்ரா பவுர்ணமி 📆தினம்-🏛திருவண்ணாமலைக்கு 🚌2895 சிறப்பு பஸ்கள் இயக்கம்🎉

Share This

🏛தமிழகத்தில் தேர்தல் வரும் 📆18ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது👍. இந்நிலையில் அதே தினத்தில் சித்ரா பவுர்ணமி வருகிறது😯. இதனையொட்டி 🏛திருவண்ணாமலையில் அண்டை மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான 👥பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்😐. இதனால் 🗳தேர்தல் மற்றும் சித்ரா பவுர்ணமி என்று தனித்தனியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது💪. கோவில், கிரிவலம், போக்குவரத்து என்று 3 ஆக பிரித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், முத்தரசி, ஷியாமளா ஆகிய 👮2 சிறப்பு எஸ்.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, 👮600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் திருவண்ணாமலைக்கு 🚌2895 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 🚏9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன🙂. இந்த பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதை வரை செல்ல 61 சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது👌. மேலும் காவல் உதவி மையங்கள் அமைத்து பக்தர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 🚑10க்கும் மேற்பட்ட இடங்களில் 108 ஆம்புலன்ஸ்களும் நிறுத்தி வைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages