தமிழகத்தில் 384 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்😱-தலைமை தேர்தல் அதிகாரி🎙 - Agnipuratchi

தமிழகத்தில் 384 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்😱-தலைமை தேர்தல் அதிகாரி🎙

Share This

🏛சென்னையில் நிருபர்களை சந்தித்த 🤵சத்யபிரதா சாஹூ கூறுகையில்🎙, "மின்னணு 🗳ஓட்டுப்பதிவு எந்திரம் பழுதான இடங்களில் உடனுக்குடன் மாற்றப்பட்டது😯. அரை மணி நேரத்திற்குள் மாற்றப்படும். காலை 6 மணி முதல் 8 மணிக்குள் 305 எந்திரங்களில் மாற்றப்பட்டுள்ளன😐. மற்றப்படி எந்த பிரச்னையும் இல்லை🚫. தேர்தல் சுமூகமாக நடக்கிறது. பூத் சிலிப் இல்லா விட்டாலும் ஓட்டு போடலாம்👍. இதனை, அடையாள சான்றாக பயன்படுத்த முடியாது. வாக்காளர் அட்டை, உள்ளிட்ட 📄ஆவணங்களை பயன்படுத்தி கொள்ளலாம்😯. தேர்தல் நேரத்தை நீட்டிக்க வாய்ப்பு இல்லை. டோக்கன் வாங்கியவர்கள் அனைவரும் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது🙂" என்று தெரிவித்துள்ளார். இதனிடையே காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், சத்யபிரதா சாஹூவை சந்தித்து, ஓட்டு இயந்திரங்கள் கோளாறு😳 ஏற்பட்ட இடங்களில், ஓட்டுப்பதிவு ⌚நேரத்தை நீட்டிக்க வேண்டும் என 🙏கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages