🚀பிஎஸ்எல்வி சி45 இன்று விண்ணில் பாய்கிறது🎉-👥1000 பேர் நேரில் பார்க்க👀 இஸ்ரோ அனுமதி. - Agnipuratchi

🚀பிஎஸ்எல்வி சி45 இன்று விண்ணில் பாய்கிறது🎉-👥1000 பேர் நேரில் பார்க்க👀 இஸ்ரோ அனுமதி.

Share This

சென்னை ✈விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் 🤵சிவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்🎙, " ஒரே ராக்கெட்டில் மூன்றுவிதமான 🚀செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படுவது சிறப்பம்சம் கொண்டது👍. முதன் முதல் செயற்கைக்கோள் 648 கிலோ மீட்டர் புவி சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்படும்😐, அதன் பின்பு 28 வாடிக்கையாளர்களின் செயற்கைக் கோள்கள் 504 கிலோ மீட்டர் வட்டப்பாதையில் அதன் பின்பு கடைசி கட்டமாக 🚀செயற்கைக்கோள்களை 485 கிலோ மீட்டர் வட்டபாதையிலும் நிலை நிறுத்துகிறோம்😯. ஒரே ராக்கெட்டில் மூன்று விதமான வட்டப் பாதையில் நிலை நிறுத்தும் செயற்கைக்கோள்களை செலுத்துவது 🇮🇳இந்தியாவில் இதுதான் முதல் முறை🎉. அதோடு இம்முறை ராக்கெட்டுகளை மாணவர்கள் வந்து பார்ப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. முதல் முயற்சியாக 👥பொதுமக்கள் இந்த ராக்கெட் ஏவப்படுவதை பார்ப்பதற்கு 🇮🇳இந்தியாவில் முதல் முறையாக 👥1000 பேருக்கு அனுமதி கொடுத்துள்ளோம்🙂" என்று தெரிவித்தார்👏. 
தொடர்ந்து பேசிய அவர்🎙, "உயர் நிலைப் 🏫பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த கோடை விடுமுறையில் வெறுமனே கழிக்காமல் 📆15 நாட்கள் இஸ்ரோவுக்கு வந்து தங்கி அவர்களுக்கு பயிற்சி அளிப்பதுபோல் ஒருதிட்டத்தை உருவாக்கியிருக்கிறோம்💪. அதற்காக, 🇮🇳இந்தியாவில் உள்ள அனைத்து 🏛மாநிலங்களிலும் சேர்ந்த 108 மாணவர்களை தேர்வு செய்ய இருக்கிறோம். இந்த பயிற்சிகள் 🇮🇳இந்தியாவில் 4 இஸ்ரோ நிலையங்களில் நடத்தப்படும்👏" என்றும் கூறினார்🗣 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages