வேலூர் ஆவின் பால் மோசடி😟-அதிகாரிகள் 👥5 பேர் பணியிடை நீக்கம்🚫 - Agnipuratchi

வேலூர் ஆவின் பால் மோசடி😟-அதிகாரிகள் 👥5 பேர் பணியிடை நீக்கம்🚫

Share This

🏛வேலூர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 3.83 லட்சம் லிட்டர் பால், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.33 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் 2 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது😮. இந்நிலையில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலில் மோசடி நடந்திருப்பது😱 தெரியவந்தது. கடந்த 📆6 மாதங்களில் சுமார் 1.5 லட்சம் லிட்டர் பால் கணக்கில் வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு😨 சென்னை தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது🔈. இதுகுறித்து ஆவின் நிர்வாகத்தின் பொது மேலாளர் 🤵கோதண்டராமன் வேலூர் ஆவின் நிறுவனத்தில் ஆய்வு நடத்தி அறிக்கை📜 ஒன்றை சமர்பித்தார்😐. 
இது குறித்த விசாரணையில் ஆவின் 🤵எம்.டி. காமராஜ், பால் முறைகேட்டில் ஈடுபட்ட 👮அதிகாரிகளின் 💸மாத சம்பளத்தில் இருந்து தொகையை பிடித்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்😯. மேலும் காமராஜ் வேலூருக்கு நேரில் சென்று ஆய்வு👀 செய்தார். அப்போது பால் மாயமானது😳 குறித்து ஆவின் அதிகாரி முரளி பிரசாத்திடம் விளக்கம்🗣 கோரியிருந்தார். அதற்கு பதிலளித்த வேலூர் ஆவின் அதிகாரிகள் கடும் 🌞வெயிலால் 1.5 லட்சம் லிட்டர் பால் ஆவியாகி விட்டதாக🙄 கணக்கு காட்டியது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து வேலூர் ஆவின் 🏢நிறுவனத்தில் அதிகாரிகளாக பணிபுரியும் ஹரிரெட்டி, மகேஸ்வரராவ், பாலாஜி, சேம் கிப்சன், ஊழியராக வேலை பார்க்கும் அப்பாத்துரை ஆகிய 👥5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages