பிரிட்டன் குடியுரிமை விவகாரத்தால் ராகுல் காந்தியின் 📜வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு - Agnipuratchi

பிரிட்டன் குடியுரிமை விவகாரத்தால் ராகுல் காந்தியின் 📜வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு

Share This

காங்கிரஸ் தலைவராக தற்போது பதவி வகிக்கும் ராகுல் காந்தி கடந்த 📆2004ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது ✈பிரிட்டன் நாட்டில் உள்ள நிறுவனத்தில் சில 💸முதலீடுகளை செய்திருப்பதாக தனது 📄பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும், 🏢கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற ராகுல் காந்தியின் பட்டமளிப்பு 📜சான்றிதழில் அவரது பெயர் ’ராகுல் வின்சி’ என்ற இத்தாலிய துணைப்பெயருடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது🙄. இதனையடுத்து, தற்போது நடைபெறும் 🗳பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடும் 🏛அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து🚫 நிற்கும் சுயேட்சை வேட்பாளரான 👤துருவ் லால் என்பவர், "பிரிட்டன் குடிமகனான ராகுல் காந்தி நம் நாட்டு தேர்தலில் எப்படி போட்டியிடலாம்❓" என்றும் அவரது வேட்புமனுவை📜 தள்ளுபடி செய்ய வேண்டும்😳 என்றும் வலியுறுத்தி அந்த தொகுதி தேர்தல் 🤵அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து விளக்கம்🗣 அளிக்க ராகுல் காந்திக்கு அவகாசம் அளிக்கும் வகையில் அவரது 📜வேட்புமனு மீதான பரிசீலனை மற்றும் விசாரணை வரும் 📆22ம் தேதி நடைபெறும் என அமேதி தொகுதி 🗳தேர்தல் அதிகாரி 🤵ராம் மனோகர் மிஷ்ரா தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages