"மஞ்சள் சட்டை போட்டால் அடி": பொன்பரப்பியில் விசிக வன்முறை! - Agnipuratchi

"மஞ்சள் சட்டை போட்டால் அடி": பொன்பரப்பியில் விசிக வன்முறை!

Share This

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு நடத்திய வன்முறைக்கு அதிமுகவினர் பதிலடி கொடுத்தனர். இதனை மிகப்பெரிய சாதிக்கலவரம் என ஊடகங்கள் ஒரு தரப்பை மட்டும் குற்றம் சாட்டி செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

எனவே, நடந்த உண்மை என்ன என்பதை அனைவரும் அறிய வேண்டும்.

"விசிக வன்முறை"

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒரு பெட்டிக்கடையில் மாற்றுத் திறனாளியான வீரபாண்டியன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். தேர்தல் நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் 'திருமாவளவனுக்கு வாக்களிக்க வேண்டும்' என அவரது கடைக்கு முன்பாக பிரச்சாரம் செய்துள்ளனர். அவர்களை சற்று தள்ளிச்சென்று பிரச்சாரம் செய்யுமாறு அவர் கோரியதால் வீரபாண்டியனை விசிகவினர் தாக்கினர்.

இந்த வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக கூட்டணி கட்சியினர் சிலர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சின்னமான பானை ஒன்றை சாலையில் போட்டு உடைத்தனர்.

இந்த நிகழ்வுக்கு பிறகு - விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவானவர்கள் வசிக்கும் பகுதி வழியே சென்ற அதிமுக கூட்டணியை சேர்ந்த சுப்பிரமணியன், வெற்றி, ராஜா, சசி ஆகிய நால்வரையும் விசிகவினர் கடுமையாக தாக்கினர். கண்ணாடி பாட்டிலை உடைத்து வயிற்றில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக கூட்டணி கட்சியினர் மாணவியர் விடுதி முன்பு ஒன்று கூடி விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் எதற்காக சுப்பிரமணியனை தாக்கினர் என தட்டிக்கேட்டனர். அப்போது இரு தரப்பினரும் மோதல் மூண்டது.

சுப்பிரமணியன் உள்ளிட்ட நான்கு பேரையும் தாக்கியவர்கள் அருகே இருந்த காலனி தெருவிற்குள் ஓடி ஒளிந்தனர். அவர்களை விரட்டிச்சென்றவர்கள் அங்கிருந்த சில ஓட்டு வீடுகளை அடித்தனர்.

"தலித் செய்தியாளர் மீது விசிக தாக்குதல்"

இந்த நிலையில் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கர் காலனி பகுதிக்கு வந்து 'பொன்பரப்பி மக்கள் மீது வன்கொடுமை சட்டத்தை ஏவ வேண்டும்' என்று கூறினர். அப்போது அப்பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் 18 செய்தியாளர் கலைவாணன் என்பவர் மஞ்சள் நிற சட்டை போட்டிருந்ததால் அவரையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடுமையாக தாக்கினர். ஆனால், உண்மையில் அவர் தலித் சாதியை சேர்ந்தவர் ஆகும்.

படுகாயம் அடைந்த கலைவாணனை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

"யார் காரணம்?"

பொன்பரப்பியில் நடந்த மோதலுக்கு முழு காரணம் விசிகவும் திமுகவும் தான். கடையில் இருக்கும் மாற்றுத்திறனாளியை தாக்குவது, காலனி பகுதி வழியாக செல்லும் அதிமுக ஆதரவாளர்களை தாக்குவது என வரிசையாக எல்லா வன்முறையையும் செய்துவிட்டு, பின்னர் காலனி பகுதிக்குள் சென்று அடைக்கலம் தேடும்போது -  அதிமுக ஆதரவாளர்கள் சகித்துக்கொண்டு செல்ல வேண்டும் என்பது நியாயம் இல்லை.

அதிலும், மஞ்சள் சட்டை போட்டார் என்பதற்காகவே தலித் பத்திரிகையாளர் மீது விசிகவினர் கொலைவெறி தாக்குதல் நடத்துவது அவர்களின் சாதி வெறியை காட்டுகிறது.

இதையெல்லாம் கண்டிக்காமல் - அதிமுக கூட்டணியினர் மீது மட்டும் பழிபோடும் இழிகும்பல் - உண்மையில் மிக வன்மமான சாதிவெறி பிடித்த கும்பலாகவே இருக்க முடியும். இந்த கும்பல் முற்றிலுமாக முறியடிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages