புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையின் தலையை சமூக விரோதிகள் சிலர் துண்டித்துள்ளனர். இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயல் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு அமைதியாக இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத சக்திகள் தான் இந்த சமூக விரோத செயலை செய்துள்ளனர். இத்தகைய செயல்களை தமிழக அரசும், காவல்துறையும் இனியும் அனுமதிக்கக்கூடாது. அறந்தாங்கியில் தந்தை பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்.
No comments:
Post a Comment